— பின்புற வெளி (கூட்டுச்சொல்); — அடிப்பாக வெளி (கூட்டுச்சொல்); — இதய வெளி (கூட்டுச்சொல்); — உறுதியாக பாவிக்க வேண்டும்; — ஒரே சமயத்தில் (வினையடை); — விகற்பமின்மையால் (ஐந்தாம் வேற்றுமை); — விகற்பமற்ற நிலையின் உதயம் தொடரும்
முதுகின் சூனியம், மூலத்தின் சூனியம், இதயத்தின் சூனியம் — மூன்றையும் ஒரு சேர, உறுதியாகப் பாவிக்க வேண்டும். ஒரே நேரத்தில் விகற்பமற்ற நிலை உண்டாதலால், அதன் பின் நிர்விகற்பத்தின் உதயம் ஏற்படும்.