— அவ்வாறே, அதுபோல; — கனவில் — ஆ.ஏழா.எகவ.; — கூட, ஆகவும் (இடைச்சொல்); — விரும்பப்பட்ட பொருள்களை; — (பக்தனின்) பிரார்த்தனையை மீறாமல்; — நித்தியமாக, எப்போதும்; — மிகத் தெளிவாக; — மத்தியில் நிலைபெற்றவன்; — நிச்சயமாக, கட்டாயமாக; — வெளிப்படுத்துவான்
அவ்வாறே கனவிலும், பக்தனின் பிரார்த்தனையை மீறாமல், மத்தியில் (சுஷும்னையில்) நிலைபெற்றிருந்து, விரும்பப்பட்ட பொருள்களை இன்னும் தெளிவாகவே நிச்சயமாக வெளிப்படுத்துகிறான்.